மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் என்றார் வடலூர் வள்ளலார். மதம் பிடித்தால் அது வீட்டையும் நாட்டையும் (சமூகத்தினையும்) வளர விடாமல் கேடு செய்து பாழ்படுத்தும் என்றார் அறிவு ஆசான் தந்தை பெரியார்.
மதம் மக்களுக்கு அபின் என்றார் கார்ல்மார்க்ஸ். அவை எல்லாவற்றினையும்விட மதம் பிடிப்பதால் யானை எப்படி நிலைகுலைந்து மற்றவர்களையெல்லாம் தாக்கிடத் தயங்குவதில்-லையோ அதுபோலவே மதவெறி மனித சமூகத்தினைச் சாய்த்து சின்னாபின்னமாக்கி சிதைத்து நாளும் கொடுமைக்கு ஆளாக்குகிறது!
இந்த லட்சணத்தில் மதம் மக்களை நல்வழிப்படுத்துகிறது என்று சதா சர்வ காலமும் நிரந்தரப் பொய்யைப் பரப்பி, பலர் மதத்தை வியாபாரப் பொருளாக்கி நன்றாக கொழுத்து திரிகிறார்கள்.
குழந்தைகளைக் கெடுத்த படங்களும் குழந்தைகளுக்காக எடுத்த படங்களும்
ஒவ்வொரு கோடைக்காலத்தின் போதும் தமிழ்நாட்டில் ஏதேனும் ஒரு படம் பெரிய வெற்றிப் படமாகும். சில முக்கிய உச்ச நட்சத்திரங்களின் படங்கள்கூட இந்தக் காலத்தைக் கணக்கிட்டே வெளியிடப்படும். காரணம் குழந்தைகளுக்கு விடுமுறைக்காலம் என்பதுதான். எனவே, அக்காலத்தில் அறுவடை செய்துகொள்வதற்கென்றே பிரத்-யேக-மாகப் படங்களும் தயாரிக்கப்படும். அவை அனைத்-திற்கும் ஒரே குறி குழந்தைகள்-தாம்!
அவர்களுக்கும் பிடித்தமானது என்று இவர்களே கருதிக்கொண்டு ஏதேனும் ஒரு பாடலையோ, நகைச்சுவைக் காட்சியையோ முன்னிறுத்திப் பெருமளவில் விளம்பரங்கள் செய்யப்படும். குழந்தைகளுக்குப் பிடித்த குதூகலமான படம், குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் என்றெல்லாம் வாசகங்க-ளோடு விளம்பரங்கள் வரும். ஆனால், குழந்தைகளுக்கென்று என்ன இருக்கிறது என்றால், ஏதாவது குத்துப்பாட்டைக் காட்டுவார்கள். ஓ போடு என்ற ஒரே பாட்டை வைத்து ஜெமினி என்ற படத்தையே ஓட்டியவர்கள்தானே தமிழ் சினிமாக்காரர்கள். ரஜினி - வடிவேலு ஆபாசக் காமெடியைக் குழந்-தைகள் ரசிக்கும் காட்சிகள் என்று சந்திரமு-கியை ஓட்டவில்லையா... எனவே அதெல்லாம் பிரமாதம் இல்லை. நாக்க-மூக்கா...., நாட்டுக்-கட்டை இப்படி ஏதாவ-தொன்று கிடைத்துவிடும்.
சிறுகதை
தெருவெங்கும கோயில்கட்டி.
என் எசமானிடம் அவன் எகிறி குதித்தான். அதுவும் பலர் பார்த்திருக்க.. அவர் வயது, தகுதியையும் பாராமல்.
எப்பப் பார்த்தாலும் இவரு என்னையே குறி வச்சு தாக்கறாரு.. இவுக சோலியைப் பார்த்துகிட்டு செவவேனனு போக வேண்டி-யது-தானே மகா சனங்களே, அய்யா மாருங்-களே, அம்மா மாருங்களே, சொல்லுங்க என்ற கை கூப்பி, கண்களில் கண்ணீர் மல்கி உருக்கமானதொரு நாடகத்தை நடத்திக் காண்பித்தான். அங்கு கூடியிருப்பவர்களை தன்பால் இழுத்துக்கொள்ள வேண்டுமென்-பதற்காக வேண்டி.
இல்லை.. இல்லை. இல்லவே இல்லை. நீ செய்யது நல்லாவாயிருக்கு. அதுவும் வூரு பொதுஇடத்தில் என்றார் என் எசமான் அவனிடம்...
என்ன.. என்ன... என்னங்க பண்ணிட்டேன்? திருடினேனா- கொள்யைடிச்சேனா? கத்தி-காட்டி யாரையாச்சும் மிரட்டினேனா? எந்த பொம்பிளைகிட்டவாவது தப்பா நடந்து-கிட்டேனா? சொல்லுங்க.. இங்கே கூடியிருக்-கிறவங்க தெரிஞ்சுகட்டும் என்றான் அவன்.
அது அந்த இடம் ஒரு முனிசிபல் பூங்கா..