எஸ்.சி., எஸ்.டி.களுக்கும் கிரீமிலேயர் கொண்டு
வரவேண்டும் என்கிறார் இந்தியாவின் தலைமை நீதிபதி
புதுடில்லி, நவ. 12- தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர்க்கும் பசை (கிரீமிலேயர்) முறை அறிமுகப் படுத்த வேண்டிய காலம் வந்து விட்டது என்று கூறியுள்ளார் இந்தியத் தலைமை நீதிபதி கே.ஜி பாலகிருஷ்ணன். இந்தப் பதவியில் அமர்ந்த முதல் தாழ்த்தப்பட்டவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக வருமானம் வருகிறது என்பதால் மட்டுமே ஜாதி மனோபாவம் அழிந்துவிடாது என்று அவர் டைம்ஸ் ஆப் இந்தியா ஏட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். ஆனாலும் அதிக வருமானம் உள்ளவர்களை இட ஒதுக்கீடு அளிப்பதிலிருந்து படிப்படி யாக நீக்க வேண்டும் எனும் கருத்துக்கு நாம் வரவேண்டிய காலம் வந்துவிட்டது. ஆனால், இது அரசியல் ரீதியாகப் பெரும்பான்மைக் கருத்து அறிந்து முடிவு எடுக்கப்பட வேண்டிய விசயமாகும் என் பவை தலைமை நீதிபதியின் பேட்டியில் கூறியவை.