ஈழத்தமிழர் இன்னல் களைய முதல்வர் கலைஞர் உரை :
குறுந்தகடு ஒலிபரப்பு

பொதுமக்கள் இன உணர்வுடன் வரவேற்று எழுச்சி பெற்றனர்

சென்னை, நவ. 18- ஈழத்தமிழர் இன்னல் களைய தமிழக முதல்வர் கலைஞர் ஆற்றிய உரை குறுந்தகடு தமிழ்நா டெங்கும் ஒலிபரப்பப்பட்டது. அதனை கேட்டு பொதுமக்கள் இன உணர்வுபெற்றனர்.

சென்னை மயிலை மாங் கொல்லையில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் ஈழத் தமி ழர் தம் அவலநிலை குறித்து நெஞ்சுருக ஆற்றிய இனமான மனிதநேய உரையின் குறுந்தகடு நாடெங்கும் திராவிடர் கழகம் சார்பில் எழுச்சியுடன் ஒலிபரப்பட்டது. அதன் விவரம் வருமாறு:

ஒழுகினசேரி

குமரி மாவட்ட தி.க சார்பில் அக். 20 அன்று மாலை 6 மணிக்கு நாகர்கோவில் - ஒழு கினசேரி பெரியார் படிப்பகத் தில் எழுச்சியுடன் கலைஞர் உரை ஒலிபரப்பப்பட்டது. மாவட்ட தி.க. தலைவர் ப. சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். மாவட்ட தி.க. செயலாளர் கோ. வெற்றிவேந் தன் முன்னிலை வகித்தார். நாகர்கோவில் நகர தி.க. தலைவர் கவிஞர் எச். செய்க் முகமது ஒலிபரப்பை தொடங்கி வைத்தார். இராஜாக்கமங்கலம் ஒன்றிய தி.க. இளைஞரணி தலைவர் ம. மகேஷ், செயலா ளர் அ. ஜெகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அகஸ் தீசுவரம் ஒன்றிய செயலாளர் பேரரசு மற்றும் ஏராளமா னோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஏராளமான பொதுமக்களும் கலைஞர் உரையை கேட்டு இன உணர்வு பெற்றனர்.

வடிவீசுவரம்

குமரி மாவட்ட தி.க. சார்பில் நாகர்கோவில் வடிவீசுவரத்தில் அக். 20 அன்று கலைஞர் உரை குறுந்தகடு ஒலிபரப்பப்பட் டது. மாவட்ட தி.க. தலைவர் ப.சங்கரநாராயணன், தி.க. மகளிரணி அமைப்பாளர் அருணா சங்கரன், நாகர்கோ வில் நகர் மன்ற உறுப்பினர் பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கோட்டாறு

நாகர்கோவில் நகர தி.க. இளைஞரணி சார்பில் கலை ஞர் உரை குறுந்தகடு அக். 20 அன்று திங்கள் மாலை 6 மணிக்கு கோட்டாறு வட்ட விளை பகுதிகளில் எழுச்சி யுடன் ஒலிபரப்பப்பட்டது. நாகர்கோவில் நகர தி.க. இளைஞரணி தலைவர் மு. சேகர் அதற்கான ஏற்பாடு களை சிறப்புடன் செய்திருந் தார். திராவிடர் கழக தோழர் களும், ஏராளமான பொது மக்களும் இந்நிகழ்வில் பங் கேற்றனர்.

ஆரல்வாய் மொழி

தோவாளை ஒன்றிய தி.க. சார்பில் கலைஞரின் மனிதநேய உரை குறுந்தகடு அக். 20 அன்று 6 மணிக்கு ஆரல்வாய் மொழி பெருமாள்புரம் பகுதி யில் எழுச்சியுடன் ஒலிபரப் பப்பட்டது. தி.க. பொறுப் பாளர் மா. மணி அதற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்திருந்தார். தோவாளை ஒன்றிய தி.க. தலைவர் லெ. சண்முகவேல் மற்றும் கழகத் தோழர்கள், பொதுமக்கள் என பலரும் கலைஞரின் உரையை கேட்டனர்.

கொட்டாரம்

அகஸ்தீசுவரம் ஒன்றிய தி.க. சார்பில் தமிழக முதல்வர் கலைஞரின் சங்கநாதம் அக். 20 அன்று மாலை 6 மணி கன்னியாகுமரி - கொட்டாரம் சந்திப்பில் எழுச்சியுடன் ஒலி பரப்பப்பட்டது. அகஸ்தீசு வரம் ஒன்றிய தி.க செயலாளர் கோம்பவிளை செ. நாகலிங்க பெருமாள் அதற்கான ஏற் பாடுகளை செய்திருந்தார். அங்கு ஒலிபரப்பட்ட கலை ஞரின் உரையை தி.க., தி.மு.க. தோழர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் என பலரும் கேட்டு மகிழ்ந்தனர். திங்கள் நகர்

குருந்தன்கோடு ஒன்றிய தி.க. சார்பில் அக். 20 அன்று மாலை 6 மணிக்கு திங்கள் நகர் சந்திப்பில் பெரியார் திடலில் கலைஞர் உரை குறுந்தகடு ஒலி பரப்பப்பட்டது. குருந்தன் கோடு ஒன்றிய தி.க. தலைவர் பெ. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். தி.மு.க. பேரூர் செயலாளர் திங்கள் நகர் கா. பாலையன் கலைஞர் உரை ஒலிபரப்பை தொடங்கி வைத் தார். குருந்தன்கோடு ஒன்றிய தி.க. செயலாளர் ம.ப. நூர்தீன், ஒன்றிய தி.மு.க. இலக்கிய செயலாளர் கவிஞர் இப்ராகிம், தி.க. தோழர்கள் நெய்யூர் ஜெப ராஜ், சுபாஷ் மற்றும் தி.மு.க. தோழர்கள் பலர் கலந்து கொண்டனர் பொதுமக்கள் கலைஞரின் உரையை உணர்ச்சி பொங்க கேட்டனர்.

இடைப்பாடி

அக். 20 அன்று காலை 10.30 மணிக்கு இடைப்பாடி பேருந்து நிலையம் முன்புள்ள தி.மு.க. கொடிக்கம்பம் அருகில் நகர தி.க. சார்பில் நகர தி.க. செயலாளர் கே.என் பாலு தலைமையில், நகர தி.க தலைவர் சி. இராமன், ஒன்றிய தி.க. அமைப்பாளர் கே. கதிர் வேல் ஆகியோர் முன்னிலை யில் தமிழக முதல்வரின் உரை குறுந்தகடு ஒலிபரப்பப்பட் டது.

இடைப்பாடி நகர தி.மு.க. செயலாளரும் நகர்மன்ற துணைத் தலைவருமான கே. ஜெயபூபதி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். எட்டா வது வார்டு தி.மு.க. செயலாளர் ஏ.பி. மணி, நகர தி.க. இளை ஞரணி தோழர் வடிவேல், பெரியார் பெருந்தொண்டர் கள் அ. சந்தியநாதன், எஸ்.பி. மெய்வேல், கோ. அன்புமதி மற்றும் திரளான தி.மு.க. இளைஞரணி தோழர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

பேருந்து நிலையம் முன் புள்ள சேலம் பிரதான சாலை இருமருங்கிலும் தி.க., தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டு, எட்டுக்கும் மேற்பட்ட ஒலி பெருக்கிகள் அமைத்து, தி.க.., தி.மு.க. கழகப் பாடல்களுக்கு இடைஇடையே முதல்வர் கலைஞரின் உரை ஒலி பரப் பப்பட்டது. மாலை 6 மணி முதல் மேல் இரவு 10 மணி வரையிலும் நிகழ்ச்சி எழுச்சி யோடு நடைபெற்றது.

சேலம்

அக். 21 அன்று மாலை 5 மணிமுதல் இரவு 8 மணிவரை சேலம் மாநகர் மாவட்ட கழகம் சார்பில் பொன்னம் மாப்பேட்டை, அம்மாப் பேட்டை பெரியார் படிப் பகம், வித்தியா நகர், கடைவீதி, ஆனந்தா அருகில் சேலம் சின் னக் கடைவீதி மற்ற பகுதி களில் ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி கலைஞர் ஆற்றிய உரை ஒலிபரப்பப்பட்டது.

அக். 25 அன்று மாலை 5 மணிமுதல் இரவு 8 மணிவரை சேலம் தாதகப்பட்டி, தாகூர் தெரு, குமரன் நகர் 1, குமரன் நகர் 2, குமரன் நகர் 3, தாகதப் பட்டி கீழத் தெரு, காமராசர் ககர் மன்ற பகுதிகளில் தமிழர் தலைவர் கி. வீரமணி, சுப. வீரபாண்டியன் மற்றும் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் ஆகியோரின் உரை சிறப்பான முறையில் ஒலிபரப்பப்பட்டது.

கரூர்

கரூர் பேருந்து நிலையம் சுற்றுப்பாதையிலுள்ள சூரியா தேநீர் விடுதியின் முன்பு அக். 20 அன்று மாலை 6 மணிக்கு ஒலிபெருக்கி அமைத்து கலை ஞர் உரை ஒலிபரப்பட்டது தாந்தோணி நகராட்சியின் நகராட்சி அலுவலகம் முன்பு ஒலிபெருக்கி அமைத்து கலை ஞரின் உரை ஒலிபரப்பப்பட் டது. இதற்கான ஏற்பாட்டை மாவட்ட அமைப்பாளர் வே. இராசு மற்றும் தாந்தோணி நகராட்சி திராவிடர் கழக அமைப்பாளர் மா. மனோகரன் உள்ளிட்ட பலர் ஏற்பாடு செய்தனர்.

வெங்கமேடு

இனாம் கரூர் நகராட்சி பகுதியான வெங்கமேட்டில் தி.மு.க. பணிமனை முன்பு சேலம் பிரதான சாலையில் அக். 20 அன்று மாலை 6 மணிக்கு குறுந்தகடு ஒலிபரப் பட்டது. இந்நிகழ்ச்சியை கரூர் நகரத் தலைவர் தி. செல்வராஜ், துணைத் தலைவர் தே. அலெக்ஸ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

அனைத்து இடங்களிலும் கொட்டும் மழையிலும் ஈழப் பிரச்சினை குறித்த கலைஞரின் உரை குறுந்தகடு தலைமைக் கழகத்தின் ஆணைப்படி அக். 20 அன்று மாலை 6 மணிக்கு ஒலிபரப்பப்பட்டது.

இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் கரூர் மாவட்ட தி.க. தலைவர் வழக்கறிஞர் மு.க. இராசசேகரன், செயலாளர் ம. சதாசிவம், துணைச் செயலாளர் அ. இராமராசு ஆகி யோர் ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தினர்.


நகல் எடுக்க மின்னஞ்சல் உங்கள் கருத்து

 

சென்னை:

  • பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம்
  • பெரியார் கணிணி ஆய்வுக் கல்வியகம்
  • பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யம்
  • பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம்
  • பெரியார் தொழிற் படிப்பு நிறுவனம் (CA/ICWA/ACS)
  • பெரியார் தத்துவக் கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு
  • மகளிர் மேம்பாடு, மறுமலர்ச்சிக்கான பெரியார் அமைப்பு (பவர்)
  • பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
  • பெரியார் இலவச சட்ட உதவி மய்யம்

திருச்சிராப்பள்ளி:

  • நாகம்மை குழந்தைகள் இல்லம்
  • பெரியார் தொடக்கப்பள்ளி
  • பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி
  • பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி
  • நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
  • பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
  • பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி
  • பெரியார் கணினி மய்யம்
  • பெரியாரியல் பயிற்சிக் கல்லூரி
  • பெரியார் செவிலியர் கல்லூரி

தஞ்சாவூர்:

  • பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
  • பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி
  • பெரியார் சமூக தொடர் கல்விக் கல்லூரி
  • பெரியார் உயிரி தொழில் நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம்
  • பெரியார் புத்தாக்க எரிசக்திப் பயிற்சி நிறுவனம்

மருத்துவமனைகள்:

  • பெரியார் மணியம்மை மருத்துவமனை - நகர குடும்ப நல மய்யம், சென்னை
  • புற்றுநோய் ஆய்வுக்கான பெரியார் மய்யம், சென்னை.
  • பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி
  • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், தஞ்சாவூர்
  • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், சோழங்கநல்லூர்
  • டாக்டர் மரகதம் - மாரியப்பன் மருத்துவமனை, சேலம்

புதுடில்லி:

  • பெரியார் மய்யம், பாம்நோலி
  • பெரியார் மய்யம், ஜசோலா

 

Viduthalai Publications
© Copyright 2008 - www.viduthalai.com All rights reserved. Designed and Hosted by Web Division,Viduthalai