திராவிடர் கழகம் இருப்பது நாட்டுக்கு
நல்லது என முதல்வர் கலைஞர் கூறினார்

தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என். நேரு பேச்சு

திண்டுக்கல், நவ. 19- திராவிடர் கழகம் இருப்பது நாட்டுக்கு நல்லது என்று முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கூறிய செய்தியை எடுத்துக்காட்டி போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு உரையாற்றினார்.

திண்டுக்கல்லில் 15-11-2008 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

பாராட்டுகின்றவர் பாராட்டினால்தான்

பாராட்டுரை என்பது யார் பாராட்டினாலும் அது பாராட் டுரை அல்ல. பாராட்டுகின்ற வர்கள் பாராட்டினால்தான் அந் தப் பாராட்டுக்கே ஒரு பெருமை (கைதட்டல்).

ஏனென்று கேட்டால் யார் வேண்டுமானாலும் பாராட்டி விடலாம். ஆனால், எதையும் எதிர் பாராமல் தலைவர் கலைஞர் அவர்களுடைய ஆட்சி நிலைக்க வேண்டும், நீடிக்கவேண்டும் என்று கருதுகின்றவர்கள் நீங்கள்.

தமிழ்நாட்டு மக்களிடையே மிகப்பெரிய நல்ல பெயரை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தினந்தோறும் மாலை ஏழு மணி, ஏழரை மணி அளவிலே நம் முடைய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களைச் சந்தித்து காலையிலிருந்து நடைபெறு கின்ற நிகழ்ச்சிகளிலே மனச் சோர்வுற்றிருந்தாலும், மனம் உற்சாகம் அடைந்தாலும் அல்லது சோர்வுற்றிருக்கின்ற பொழுது நாங்கள் இருக்கின்றோம் உங் களுக்கு. நீங்கள் தைரியமாகச் செயல்படுங்கள் என்று பாராட்டி தைரிய உரை ஆற்றவும், மகிழ்ச் சியாக இருக்கின்ற பொழுது அந்த மகிழ்ச்சியிலே பங்கேற்கவும், தொடர்ந்து மிகச் சிறப்பாக எங் களுடைய முதல்வர் அவர்களை தினந்தோறும் மாலையில் வந்து ஆசிரியர் சந்திப்பது என்பது நம் முடைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அதை மிகப் பெரிய பலமாகக் கருதுகின்றார். எத் தனையோ பேர் முதலமைச்சரை சந்திக்கக் காத்திருக்கின்றார்கள்.

முதலமைச்சர் விரும்பி சந்திக்கின்ற ஒருவர் யார்?

ஆனால், முதலமைச்சர் விரும்பி சந்திக்கின்ற ஒரே தலை வர் நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்களைத்தான் (பலத்த கை தட்டல்). அறிவாலயத்திலிருந்து புறப்படுகின்ற பொழுதே சொல்லு வார்கள். ஆசிரியர் அவர்களிடத் திலே தொலைபேசியிலே தொடர்பு கொண்டாகிவிட்டதா? ஆசிரியர் புறப்பட்டு விட்டாரா? என்று கேட்கிறார் என்று சொன் னால், அது எந்தளவுக்கு முதல மைச்சர் அவர்கள் ஆசிரியரை நேசிக்கிறார் என்பதற்கு இதுதான் அடையாளம். நாங்கள் அருகிலிருந்து பார்க் கின்ற காரணத்தால் அதை எல் லாம் நாங்கள் அறிவோம். அவ ரும் எந்தப்பணி இருந்தாலும், அவரை வந்து உற்சாகப்படுத் துகின்ற அந்தப் பணியை அவர் தவற விடுவதே இல்லை. தொடர்ந்து அவர்கள் அந்தப் பணியை அவர்கள் செய்துகொண் டிருக்கின்றார்கள்.

எனவே அவர் பாராட்டுவது என்பது எங்களை ஆளாக்கிய கலைஞர் அவர்களைப் பாராட்டு வதற்குச் சமம் என்ற அளவிலே தான் இந்த கூட்டத்திலே வந்து நாங்கள் கலந்துகொண்டிருக்கின் றோம். கலைஞர் அவர்களை நமது ஆசிரியர் அவர்கள் திருச்சிக்கு அழைத்தார். கலைஞர் அவர்கள் வந்தார். திராவிடர் கழகம் சார்பாக திருச்சியில் உள்ள பெரியார் கல்வி நிறுவனங்களுக்கு அழைத்துச் சென்று நமது ஆசிரியர் அவர்கள் ஒரு விழா நடத்தினார்கள். எப்பொழுதும் போல ஆசி ரியர் அய்யா அவர்கள் முதல்வரை வரவேற்க காத்துக் கொண்டு நிற்கின்றார். பெரியார் பள்ளி வளாகத்தில் முதல்வர் அவர்களின் கார் நுழைகிறது. அப்பொழுது கலைஞர் அவர்களு டன் காரில் நாங்கள் சென்றிருந் தோம். அப் பொழுது சொன்னார். அய்யா அவர்கள் ஏகப்பட்ட சொத்தை இந்த கழகத்திற்காக சம்பாதித் தவர்.

சேரவேண்டியவரிடம் சேர்ந்து

இது என்னாகப் போகிறதோ என்று நினைத்தேன். ஆனால் இது சேர வேண்டியவரிடம் சேர்ந்து பல மடங்கு பெருகியிருக் கிறது (கைதட்டல்). அது இவ ரைத் தவிர வேறு யாரும் அதைக் காப்பாற்றியிருக்க முடியாது.

நாமெல்லாம் இவ்வளவு பெரிய கட்சி வைத்திருக்கிறோம். நமக்கு இவ்வளவு பெரிய இடம் இல்லையென்று சொன்னதை நான் அவர்களிடம் சொல்லியி ருக்கின்றேன். (கைதட்டல்). முதலமைச்சர் கலைஞர் அவர்கள் இதை மனதார சொன் னார். இன்னும் சொல்லபோனால் நீங்கள் தயவு செய்து வருத்தப் படக்கூடாது. ஒருமுறை உங் களுக்கும், எங்களுக்கும் சங்கடங் கள் இருந்த காலம். நான் தோற்றதே உங்களால்தான் (சிரிப்பு - கைதட் டல்). எண்ணூறு ஓட்டுகளில்தான் தோற்றேன் (சிரிப்பு). திராவிடர் கழகத்துக்காரர்கள் எப்படி வேலை பார்த்தார்கள் என்பது எனக்குத் தெரியும் (சிரிப்பு - கைட்டல்).

அப்படி ஒரு சங்கடம் இருந்த பொழுது நான் தலைவர் கலைஞர் அவர்களிடம் பேசிக் கொண்டி ருக்கும்பொழுது சொன்னேன். நாங்கள் சில கருத்துகளைச் சொன்னோம். அவர் சொன்னார், நீங்கள் நினைப்பதெல்லாம் தவறு. அது இருக்கவேண்டும். திராவிடர் கழகம் இருந்தால்தான் இந்த நாடு சரியாக இருக்கும் (பலத்த கை தட்டல்). அவர்கள் இன்றைக்கு நம்மோடு வருத்தமாக இருப் பார்கள். ஆனால், திராவிடர் கழகம் மட்டும் இல்லையென்று சொன்னால் இந்த நாட்டிலே ஏற்றத் தாழ்வுகள் என்பதுதானாக வந்துவிடும். அவர்கள் இருப்பதைக் கொண்டுதான் மற்றவர்கள் பயந்து கொண்டிருக்கின்றார்கள் (பலத்த கைதட்டல்). எனவே நாங்கள் எல்லாம் பிறந்து வளர்ந்த இடம். அந்த இடம் எப்பொழுதும் இருக்கவேண்டுமென்று கருத்து வித்தியாசமாக இருந்த நிலையில் கூட தலைவர் கலைஞர் அவர்கள் சொல்லுவார்கள். உங்களிடம் இதுவரை நான் சொன்னதில்லை. ஏதோ தப்பாக நினைத்து விடுவீர் களோ என்பதற்காக நான் சொல்ல வில்லை. இங்கே அப்படித் தலைவரால் பாராட்டப்படுகின்ற தலைவரால் நேசிக்கப்படுகின்ற தலைவரால் மதிக்கப்படுகின்ற திராவிடர் கழகத்தினுடைய தலைவர் ஆசிரி யர் அய்யா அவர்கள் எப்பொ ழுதும் பக்கத்தில் இருப்பவரை பாராட்டும் பொழுது இன்னும் உற்சாகமாக வேலை செய்வார்கள் என்பதற்காக என்னையும் அமைச் சர் இ. பெரியசாமி அவர்களையும் பாராட்டுவதாக இங்கே சொல்லி யிருக்கின்றார்கள். உள்ளபடியே இதற்கு எங்க ளுக்கு அருகதை இருக்கிறதோ, இல்லையோ. இந்தப் பாராட் டுக்குப் பிறகாவது ஒரு தகுதி யானவர்களாக எங்களை வளர்த் துக்கொள்வதற்காக நிச்சயமாக நாங்கள் பயன்பட வேண்டும் என்று நினைத்துக் கொள்கின் றேன். அதைவிட எல்லா பாராட் டுகளும் தலைவர் கலைஞர் அவர்களுக்குத்தான். எங்ககிட்ட ஒன்றும் இல்லை (பலத்த கைதட்டல்).

கழக ஆட்சியில் செய்த சாதனைகள்

இதைச் சொல்லி முடித்து அடுத்து பெரியசாமி அவர்களிடம் வருகிறேன் (சிரிப்பு - கைதட்டல்). முதலில் இங்கே சொல்லியிருக் கின்றார்கள். போக்குவரத்து ஊழியர்களுக்கு 12 சதவிகிதம் ஊதிய உயர்வு கொடுத்திருப்பது, அடுத்தது 20 சதவிகிதம் போனஸ் கொடுத்திருப்பது. அடுத்தது ஏற் கெனவே வழங்கப்பட்ட சலுகை களை மீண்டும் வழங்குவது, புதிய ஆட்களை நியமிப்பது. இருக் கின்ற ஆட்களுக்குப் பதவி உயர்வு தருவது, கட்சி மாச்சரியம் பார்க்காமல், அனைத்துத் தோழர் களையும் நமது கழக ஆட்சியில் அனைவரையும் சமமாகப் பாவித்து பணியாற்ற வேண்டும் என்று எங்களுக்கு அறிவுரை கூறியவர் நம்முடைய முதல மைச்சர் அவர்கள்தான். நம்முடைய போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும், இ.பி. தொழிலாளர்களுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. இ.பி. தொழிலாளர்களுடைய பென் சனை அரசின் சம்மதத்தோடு, அரசின் கான்டிரிபியூசனோடு பெற்றுக் கொண்டிருக்கின்றார் கள். ஆனால், நாம் வைத்திருக்கும் பென்சன் என்பது, நாம் நம் முடைய தொகையை மத்திய அரசிலே பணம் கட்டிவிட் டால்கூட அதற்கு வருமான வரி கட்ட வேண்டும். அதிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று மத்திய நிதிய மைச்சரிடம் கேட்டபொழுது, உனக்கு மட்டும் விலக்கு அளித் தால் நாங்கள் இந்தியா முழுக்கக் கொடுக்கவேண்டியிருக்கும். ஆகவே கொடுக்கமுடியாது என்று சொல்லிவிட்டார். அதனால் அந்தப் பணத்தை நாமே வாங்கி வைத்துக் கொண்டு அதைப் பிரித்துக் கொடுக்கின்றோம்.

முதலமைச்சர் சொன்னார்

தொடர்ந்து இந்த பென்சன் என்பது அனைத்துத் தொழிலா ளர்களுக்கும் இறுதிவரை கிடைக் கின்ற அந்தப் பணியை செய்ய வேண்டும் என்று ஒரு திட்டத்தை முதலமைச்சர் அவர்களிடம் தெரிவித்தபொழுது அதற்கு உடனடியாக இசைவளித்து, உடனே ஒரு கமிட்டிப் போட்டு பேசு என்று சொன்னார்.

அந்தப் பேச்வார்த்தை நடந்து இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டி ருக்கிறது. எனவே அரசிடமிருந்து என்ன நடவடிக்கை வருகிறது என்பதைப் பார்த்துத்தான் இறுதி நடவடிக்கை எடுக்கமுடியும்.

அப்படி இந்த இ.பி. போல வரவேண்டும் என்கிறபொழுது ஜெயலலிதா ஆட்சியில் மூன்றாண் டுக் கால ஒப்பந்தம் என்பதை அய்ந்தாண்டுக் காலமாக மாற்றி விட்டார்கள். அதை மூன்றாண்டுக் காலமாக மாற்ற வேண்டும் என்று தொழிற்சங்கத் தலைவர்கள் - இங்கு வந்திருக்கின்ற தொழிற்சங்க தலைவர்கள் சி.அய்.டி.யு. தொழிற் சங்கம், அ.தி.மு.க. தொழிற்சங்கம், வலது கம்யூனிஸ்ட்டு தொழிற் சங்கங்கள் எல்லாம் இணைந்து மூன்றாண்டாக வேண்டும் என்கிற பொழுது வையா மீடியாவாக நானாக ஒரு முடிவு பண்ணி இ.பி. போல பென்சன் வாங்க வேண்டு மானால், நான்கு வருடத்திற்கு ஒருமுறை ஒப்பந்தத்தை வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லி இவர்களிடமெல்லாம் பேசி அறிவித்து விட்டோம். டாக்டர் ராமதாஸ் ஒரு அறிக்கை கொடுத்தார். நீங்கள் அதை மூன்று வருடமாக ஆக்க வேண்டும் என்று. ஏய்யா, அவர் சொல்லிச் செய்கிற மாதிரி ஆகிவிடும் சீக்கிரம். மூன்று வருடமாக ஆக்கிவிடு என்று ஒரே நிமிடத்தில் சொல்லிவிட்டார். ஆகவே அதைச் செய்தவரும் கலைஞர் அவர்கள்தான். பேச்சு வார்த்தை ஏற்பட்டது.

20 சதவிகித போனசைக் கொடு

நாங்கள் சொன்னோம் - 20 சதவிகித போனஸ் தேவையில்லை, 16,17,18,19,20 என்று அய்ந்தாண்டுக் காலத்தில் ஒரு ஒரு சதவிகிதமாக கூடுதலாக்கிக் கொடுத்துவிடலாம் என்று முதலமைச்சரிடம் கேட்ட பொழுது தேர்தல் நேரத்தில் நான் சொல்லியிருக்கின்றேன். 20 சதவிகித போனஸ் என்று.

எனவே 20 சதவிகித போனசை கொடு என்று சொன்னவரும் - கலைஞர் அவர்கள்தான் (கைதட் டல்).

அதேபோல போனஸ் மட்டுமல்ல, சம்பள உயர்வு வருகின்ற பொழுது எட்டு சதவிகிதம், பத்து சதவிகிதத்திற்கு மேல் இதுவரை சம்பள உயர்வு கொடுத்ததில்லை. ஆனால் தொழிற்சங்கங்கள் சொல்லு கிறபொழுது ஒரு ஒப்பந்தமே இல்லாமல் போய்விட்டது எங்களுக்கு. இடையிலே ஜெயலலிதா ஆட்சியில் ஒப்பந்தமே இல்லை. அதனால் அதை சேர்த்து எங்களுக்குத் தரவேண்டும் என்று சொன்னபொழுது நாங்கள் முதலமைச்சரிடம் சென்று இப்படி கேட்கிறார்கள் என்று கேட்டேன்.

கேட்டதைக் கொடு என்று சொன்னார் - உடனடியாக. மறுப்பே இல்லை. இதை செய்தவரும் கலைஞர் அவர்கள்தான். நமது அமைச்சர் இ. பெரிய சாமி அவர்கள் சொன்னதுபோல பஸ் கட்டணத்தை உயர்த்த வில்லையே என்று கேட்ட பொழுது உனக்கு டீசல் விலை ஏறிப்போய் விட்டது. எவ்வளவு பணம் வேண்டும் 120 கோடியை வாங்கிக் கொள் என்று சொல்லி விட்டார். அதற்கப்புறம் அதிலே யும் பேசுவதற்கு எங்களுக்கு வாய்ப் பில்லை.

எனவே இப்படி தொழிலா ளர்கள் மட்டுமல்ல, அதிலே பணி யாற்றுகின்ற பொறியாளர்கள் 25 ஆண்டுகாலமாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் சம்பள உயர்வு. அதையும் அரசுக்கு இணையாக நம்முடைய முதல மைச்சர் அவர்கள் தான் வாங்கித் தந்திருக்கின்றார்கள்.

கலைஞர் சொல்லி நாங்கள் செய்தது

நான் இதை எல்லாம் சொல் லுவதற்கு காரணம், நம்முடைய வருவாய்த்துறை அமைச்சர்கள் சொன்னதுபோல இதிலே நடை பெற்ற அனைத்து நல்ல செயல் களும் மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் சொல்லி நாங்கள் செய்தது. இந்தப் பாராட்டு என்பது முழுமையாக நம்முடைய முதமைச்சர் அவர் களைத்தான் சாரும். இதிலே நாங்கள் கருவிகள். நாளைக்கு என்னை எடுத்துவிட்டு இந்த வேலையை செய்யச் சொன் னாலும் பெரியசாமி இதைவிட செய்வார். அதிலே ஒன் றும் மாற்றம் இல்லை. இயக்கு கிறவர் அவர். பார்க்கமுடியாத முதலமைச்சர் இருந்தால் நாங்கள் எப்படி பஸ் வாங்குவது? (சிரிப்பு - கைதட்டல்). தினந்தோறும் மக்களுடைய பிரச்சினைகளை சந்திக்கின்ற முதலமைச்சர் அவர்கள் இருக் கின்ற காரணத்தால்தான் இதிலே இது வரை ஆயிரம் கோடி ரூபாயை போக்குவரத்துத் துறை இலாகாவிற்கு முதலமைச்சர் அவர்கள் வழங்கியிருக்கின்றார் கள். அதனால்தான் மற்றவர் களைக் காட்டிலும் பாராட்டு என்பது எங்களுக்குக் கிடைத் திருக்கிறது.

இன்னும் சொல்லப்போனால் 1972 ஆம் ஆண்டு, போக்குவரத்துக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. அன்றைக்கு வேலையில் சேர்ந்த தொழிலாளர்கள் கிட்டத் தட்ட இந்தக் காலகட்டத்தில் தான் அடுத்த ஆண்டுக்குள்ளாக கிட்டதட்ட நாற்பதாயிரம் பேர் பணி ஒய்வு பெற இருக்கிறார்கள். ஏற்கெனவே அய்ந்தாண்டு காலப் பணிக்கு ஆட்களை எடுக்க வில்லை.

ஆட்கள் ஓய்வுபெற ஓய்வுபெற பஸ் ஓட்டுவதற்கு ஆட்கள் இல்லை. முதலமைச்சரிடம் சொன்னபொழுது எவ்வளவு பேர் வேண்டுமானாலும் எடு என்று சொன்னார்.

35 ஆயிரம் பேரை எடுத்திருக்கிறோம்

அதனால் 35,000 பேரை இது வரையில் எடுத்திருக்கின்றோம். தமிழ்நாடு முழுக்க 35 ஆயிரம் தொழிலாளர்கள் வந்திருக் கிறார்கள். இப்பொழுது பொறி யாளர்களையும் வேலைக்கு எடுக்கச் சொல்லியிருக்கின்றார் கள். பொறியாளரையும் எடுக்கின் றோம். ஏற்கெனவே தொழிற் சங்கங்கள் எல்லாம் சொல்லியி ருக்கின்றன

எங்களிடம் கேட்கின்ற ஒரே கோரிக்கை - தொழில்நுட்பப் பணியாளர்கள் இல்லை, அதைப் போடு, அதைப் போடு என்று சொல்லுகின்றார்கள்.

பஸ்சில்தான் வேலையே இல்லையே, எதற்கு தொழில் நுட்ப பணியாளர்கள் என்று கேட்டால், அதை ஒத்துக்கொள்வ தில்லை. அதேபோல பல்வேறு பிரச்சினைகள். ஓய்வுபெற்ற பணியாளர்கள் பணம் வாங்க வருகின்ற பொழுது இலவச பஸ் பாஸ் வழங்குவது என்றும் இப்படி ஜெயலலிதா காலத்தில் சிறையில் இருந்த காலத்தையும் பணிகால மாகக் கருதி அவர்களுக்கு சம் பளத்துடன் கூடிய பதவி உயர்வு தருவது என்கிறபொழுது ரெவின்யூ ஆனபொழுது, நான் கைந்து பேருக்குக் கிடைக்க வில்லை. அதை ஒரு தொழிலாளர் சொல்லியிருக்கின்றார். எனவே இதை எல்லாம் பேசுவதற்கு நாம் கூட்டம் கூட்ட இருக்கின்றோம்.

நான் கையெழுத்துப் போட்டால் - அந்தம்மா

எனவே தொழிலாளர் தோழர் என்பது அ.தி.மு.க.காரர்கள், பணி யாளர் சங்கத்துக்காரர்கள் கையெழுத்துப் போடவில்லை என்றால் கூட, என் காதில் வந்து சொல்லிவிட்டுப் போவார்கள். நான் கையெழுத்துப் போட்டால் அந்தம்மா மாற்றிவிட்டு விடும். நீங்கள் நடத்துவதை நடத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லி விடுவார்கள்.

எனவே நம்முடைய பெரிய சாமி அவர்கள் சொன்னது போல இப்பொழுதுகூடச் சொன்னார். வரும்பொழுது விஜயகாந்த் வீட்டில் பேசிக் கொண்டார்கள். தி.மு.க. பலம் குறைவாக இருக் கிறது என்று நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். நான் உங்களுடைய நல்லதுக் காக சொல்லுகின்றேன். கலைஞர் ஆட்சி இருக்கிறவரைக்கும்தான் உங்களுக்கு வேலை. பாக்கி யார் வந்தாலும் விற்று விடுவார்கள். அதிலே ஒன்றும் மாற்றமில்லை. ஏனென்று கேட்டால், இலகுவாக காசு கிடைக்கின்ற இலாகா இது ஒன்றுதான். எதையும் எதிர் பார்க்காமல் பொதுத் துறை மூலம் இந்த இலாகாவை நடத்தவேண் டும் என்று எண்ணுகின்ற ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். ஒரே தலைவர் கலைஞர் அவர்கள்தான் (கைதட்டல்). எனவே அவருடைய கரம், அவருடைய கழகம் பலமாக இருக்க வேண்டும்.

இன்றைக்கு இருபதாயிரம் பேருந்துகள்

அது மட்டுமல்ல, அவருடைய ஆட்சி பலமாக இருந்தால்தான் இந்தப் போக்குவரத்து கழகம் பலமாக இருக்கும். 18 ஆயிரம் பேருந்துகள் இருந்த இடத்தில் இன்றைக்கு 20 ஆயிரம் பேருந்து களை கொண்டு வந்திருக்கின் றோம். இரண்டாயிரம் புதிய வழித்தடங்களை உருவாக்கியி ருக்கின்றோம். இதெல்லாம் நடப் பதெல்லாம் கலைஞர் அவர்கள் இருக்கின்ற காரணத்தால்தான். இப்படி போக்குவரத்துக் கழகத் தோடு நம்முடைய வருவாய்த் துறை அமைச்சர் அவர்களுக்கும் பாராட்டு. வருவாய்த்துறை அமைச்சர் சட்டமன்ற உறுப்பின ராக இருக்கின்ற காலத்திலிருந்து எனக்குத் தெரிந்தவர். அதற்குப் பிறகு அவர் அமைச் சராக வந்தபோதும், எந்தத் துறையை எடுத்தாலும் நாங்கள் எல்லாம் கூட கொஞ்சம் அவசர மாகப் போவோம். அவசரமாகப் பேசுவோம். கொஞ்சம் கோப மாகக் கூட நடந்துகொள்வோம். ஆனால் எது வந்தாலும், எதையும் தாங்கிக் கொண்டு உட்கார்ந்த இடத்திலேயே வேலையை முடிக் கிற ஒரு கெட்டிக்கார அமைச்சர் அய்.பி. (கைதட்டல்).

அவர் அலட்டிக் கொள்வதே கிடையாது. வருவது வரட்டும் பார்த்துக் கொள்வோம் என்று இருப்பவர் (சிரிப்பு). அவருக்கு வருவாய்த் துறை கொடுத்த பொழுது உள்ளபடியே நான் அவரிடம் சொன் னேன். இந்த இயக்க ஆட்சியிலே வருவாய்த் துறையைக் கையாண்ட அமைச் சர்கள் எல்லாம் மிக மிக சீனி யர்கள். வருவாய்த்துறையை கட் சியிலே மூத்தவர்களுக்குத் தருவார் கள். நாஞ்சிலார் பார்த்த இடம், சாதிக் பாட்சா பார்த்த இடம், அப் படிப்பட்ட நிலையில் உயர்த்தி உங்களுக்குத் தந்திருக் கிறார் என்று சொன்னபொழுது, அதை யும் அவர் சிரித்துக் கொண்டே எடுத்துக் கொண்டார்.

நாங்கள்கூட அதிகாரிகளிடம் கொஞ்சம் கோபமாகப் பேசு வோம். ஆனால், பெரியசாமி அவர்கள் கோபமே படாமல் நைசாகப் பேசி முடிக்கின்ற திறமை அவருக்கு உண்டு. நான் பலமுறை கண்டிருக்கின்றேன்.

மணலி கந்தசாமி சொன்னது போல

அதனால்தான் மணலி கந்த சாமி அவர்கள் இந்த ஆட்சியைப் பற்றிச் சொல்லுகின்ற பொழுது, நாங்கள் இருபது ஆண்டுகாலம் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வெற்றி பெறமுடியாத ஒரு செயலை ஒரே பேனாவிலே கையெழுத்திட்டு உருவாக்கித் தந்தவர் கலைஞர் என்ற பாராட்டை வழங்கினார்கள் (கைதட்டல்). அப்படிப்பட்ட பாராட்டு. இன்றைக்கு கலைஞர் ஆண்டு தோறும் மூன்று லட்சம் பட்டா தர வேண்டும் என்று சொன்னால், இரண்டாண்டுகளில் ஆறு லட்சம் பேருக்கு மேல் பட்டாக்களை கூடுதலாகத் தந்தவர். அமைச்சர் கள் எவ்வளவு வேகமாக செயல் பட்டாலும் கூட அதிகாரிகள் எங்களோடு ஒத்துழைத்தால்தான் காரியங்கள் நடைபெறும். அப்படி அந்த அதிகாரிகளை எல்லாம் நல்ல முறையிலே பயன்படுத்தி, கலைஞர் அவர்கள் சொன்னதை செய்து காட்டியி ருக்கின்ற அமைச்சர் நம்முடைய அய் பெரியசாமி அவர்களைப் பாராட்டுவது என்பது ஏதோ ஒரு முகஸ்துதிக்காக நான் பாராட் டுபவன் அல்ல. கலைஞர் அவர்களுடைய மிக மிக நம்பிக்கைக்குப் பாத்திரமான தோழர். இந்த மாவட்டக் கழகத்தை மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கின்ற அமைச்சர் அவர்கள் (கைதட்டல்).

அவரையும் எங்களோடு வந்து பாராட்டு விழாவிலே கலந்து கொள்ள வைத்ததற்காக அவர் சார்பிலும் நான் நன்றி தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கின் றேன்.

நான் கா.மு. கதிரவனைக் கொறடாவாகப் பார்த்திருக்கி றேன். அதற்குப் பிறகு நீலகிரியில் இருக் கின்ற முபாரக்கை கொற டாவாகப் பார்த்திருக்கின்றேன். அவர்கள் எல்லாம் கலைஞர் அவர்களைப் பார்த்துவிட்டு அப்படியே போய்விடுவார்கள்.

நாங்கள் இருபது வருடங்கள் இருந்துவிட்டோம். சக்ரபாணி நல்ல அருமையான ஆள் (சிரிப்பு -கைதட்டல்). சட்டமன்ற உறுப் பினர்களைக் கொண்டு வந்து நிறுத்து என்று கலைஞர் அவர் கள் சொன்னால் அந்த வேலையை சரியாக செய்துகொண்டு வந்து நிறுத்துபவர். சரியாகப் பணியாற் றிக் கொண்டிருக்கின்றார்.

ஆசிரியர் அளித்தப் பாராட்டு

நாங்கள் எல்லாம் வயதிலே சிறியவர்கள். ஆசிரியர் அய்யா அவர்களை விட வயதிலே குறை வானவர்கள் என்றாலும் கூட, எங்களுடைய தாய்க்கழகம், அதன் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் எங்களை அழைத்து மேடை போட்டு எங்களைப் பாராட்டுவது என்பது எங் களுக்குக் கிடைத்த கூடுதல் டிகிரியாக ஒரு பட்டமாக நாங்கள் கருதுகின்றோம் (கைதட்டல்). சந்தடி சாக்கிலே வேலையிலே கெட்டிக்காரர்கள் திராவிடர் கழகத்துக்காரர்கள் (சிரிப்பு - கைதட்டல்). கோரிக்கைகளை எல்லாம் கொடுத்திருக்கின்றார் கள். எனவே எதையும் மாண்புமிகு முதல்வர் அவர்களுடைய துணை யோடு நிச்சயமாக தொழிலாளர் களுக்கு நல்ல காரியங்களை எங்கள் காலங்களில் செய்வோம், செய்வோம் என்று சொல்லி நன்றி தெரிவித்து அமைகிறேன். வணக் கம். இவ்வாறு அமைச்சர் கே.என். நேரு உரையாற்றினார்.


நகல் எடுக்க மின்னஞ்சல் உங்கள் கருத்து

 

சென்னை:

  • பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம்
  • பெரியார் கணிணி ஆய்வுக் கல்வியகம்
  • பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யம்
  • பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம்
  • பெரியார் தொழிற் படிப்பு நிறுவனம் (CA/ICWA/ACS)
  • பெரியார் தத்துவக் கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு
  • மகளிர் மேம்பாடு, மறுமலர்ச்சிக்கான பெரியார் அமைப்பு (பவர்)
  • பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
  • பெரியார் இலவச சட்ட உதவி மய்யம்

திருச்சிராப்பள்ளி:

  • நாகம்மை குழந்தைகள் இல்லம்
  • பெரியார் தொடக்கப்பள்ளி
  • பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி
  • பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி
  • நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
  • பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
  • பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி
  • பெரியார் கணினி மய்யம்
  • பெரியாரியல் பயிற்சிக் கல்லூரி
  • பெரியார் செவிலியர் கல்லூரி

தஞ்சாவூர்:

  • பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
  • பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி
  • பெரியார் சமூக தொடர் கல்விக் கல்லூரி
  • பெரியார் உயிரி தொழில் நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம்
  • பெரியார் புத்தாக்க எரிசக்திப் பயிற்சி நிறுவனம்

மருத்துவமனைகள்:

  • பெரியார் மணியம்மை மருத்துவமனை - நகர குடும்ப நல மய்யம், சென்னை
  • புற்றுநோய் ஆய்வுக்கான பெரியார் மய்யம், சென்னை.
  • பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி
  • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், தஞ்சாவூர்
  • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், சோழங்கநல்லூர்
  • டாக்டர் மரகதம் - மாரியப்பன் மருத்துவமனை, சேலம்

புதுடில்லி:

  • பெரியார் மய்யம், பாம்நோலி
  • பெரியார் மய்யம், ஜசோலா

 

Viduthalai Publications
© Copyright 2008 - www.viduthalai.com All rights reserved. Designed and Hosted by Web Division,Viduthalai