விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாணவர் அமைப்பினர் பேரணி
இலங்கையில் போர் நிறுத்தம்
செய்யவேண்டும், தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும்

மாணவர் பேரணியைத் தொடங்கி வைத்த தமிழர் தலைவர் கோரிக்கை!
சென்னை, நவ. 19- நமக்கு ஒரே இலக்குதான், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண் டும்; தமிழர்கள் காப்பாற்றப் படவேண்டும் என்றார் தமிழர் தலைவர்.
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாணவர் அமைப் பான, முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பில், இந்திய அரசே போரை நிறுத்து, ஈழத் தமிழர்களைக் காப்பாற்று என்ற கோரிக்கையை வலி யுறுத்தி நேற்று (18-11-2008) பிற் பகல் 3 மணியளவில், மன்றோ சிலையிலிருந்து சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லம் வரை எழுச்சிப் பேரணி நடைபெற்றது.
முற்போக்கு மாணவர் கழக மாநிலச் செயலாளர் பா. இரவிச் சந்திரன் இப்பேரணிக்குத் தலைமை தாங்கினார். திராவி டர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் எழுச்சிப் பேரணி யைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எழுச்சியுரையாற்றினார். பாட் டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு எழுச்சிப் பேரணியை முடித்து வைத்துப் பேசினார்.
முன்னதாக இந்திய அரசே போரை நிறுத்து! என்ற கோரிக்கையோடு முற்போக்கு மாணவர் கழகத்தின் எழுச்சிப் பேரணியை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.விரமணி அவாகள் தொடங்கி வைத்துப் பேசிய தாவது:
ஈழத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணியும், ஒவ் வொரு நொடியும் தமிழினம் அழிக்கப்பட்டு வருகிறது. அங்கு தமிழர்கள் மிகப் பெரிய அளவிற்கு கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள்.
தொப்புள்கொடி உறவு என்று சொன்னால் மட்டும் போதுமா? அங்கு நம் தமிழர் களை அழிக்கப்படுவதைக் கண்டித்து கண்டனம் தெரி விக்க வேண்டாமா?
அங்கு நம் தமிழினம் அழிக் கப்பட்டு வருகிறது என்னும் வேதனை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இருந்து வருகிறது. நமது ரத்தங் கள், நமது உறவுகள் அங்கே கொல்லப்படுவதைக் கண்டு இங்கே நமது உணர்வுகளை வெளிக்காட்டி வருகிறோம்.
நம்மில் யார், யார் எந்த அணியில் இருக்கிறார்கள் என்ற பாகுபாடுகளையெல் லாம் மறந்துவிட்டு, ஒட்டு மொத்தமாக நமது உணர்வு களை வெளிப்படுத்த வேண் டியநேரமிது. நம்முடைய உணர்ச்சிகளை கொட்டித் தீர்க்க வேண்டிய நேரம் இது. தீயை அணைக்க யார் முன்னே செல்வது, பின்னே செல்வது என்று பார்க்கக்கூடாது.
ராஜிவ் காந்தி கொலையை வைத்துக் கொண்டு தமிழி னத்தை அழிக்க நினைப்பவர் கள் ஏமாந்து போவார்கள். இலங்கை அதிபர் - தினம், தினம் ஒரு ஊரைப் பிடித்து வருவதாகவும், ஒரு சில கிரா மத்தைப் பிடித்து வருவதாக வும் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறார்.
நீங்கள் இப்போது எதைப் பிடித்தாலும், இறுதியாக வெற்றியை உங்களால் பிடித்து விட முடியாது. இறுதியாக யார் சிரிக்கிறார்களோ அது தான் உண்மையான வெற்றி.
இலங்கை பூநகரி பிரதேசத் தில் இருந்து விடுதலைப் புலிகள் பின்வாங்கிச் சென்றது போர்த் தந்திர உபாயமே. சிங் கள ராணுவத்தை முன்னேறிச் செல்லச் செய்வதே கடுமையாக மீண்டும் பாய்வதற்காகத்தான் என்று பிரபாகரனே தெரிவித் துள்ளார்.
இங்கே நாம் - இந்திய அரசே போரை நிறுத்து, ஈழத் தமிழர்களைக் காப்பாற்று என்று பேசிக் கொண்டு இருக் கிறோம். அங்கே தமிழர்கள் மீது குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது சிங்கள ராணுவம். நம் இனம் அங்கு காடுகளுக்கு ஓடுகிறார்கள்.
நமக்கு ஒரே இலக்குதான், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். தமிழர்கள் காப்பாற்றப்படவேண்டும். எனவே இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு, தமிழினம் காப்பாற்றப்பட நாம் அனை வரும் ஓரணியில் நின்று ஒரு குழல் துப்பாக்கியாக செயல்படுவோம்.
இந்த எழுச்சிப் பேரணியை ஏற்பாடு செய்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களை வெகுவாகப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன். - இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி பேசினார்.